BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
எந்த ரசிகர்களும் செய்யாத சாதனையை தல அஜித் பிறந்தநாளுக்கு செய்யவுள்ள தல ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தல அஜித் பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாட தல ரசிகர்கள் ஒரு வித்தியமான முயற்சியை செய்யவிருக்கின்றனர்.

அதாவது எந்த ஒரு ரசிகர்களும் செய்யாத சாதனையை தல ரசிகர்கள் செய்யவுள்ளனர். நாளைய பிறந்தநாள் டாக்கில் சுமார் ஒரு கோடி டுவிட்ஸ் போட தல அஜித் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் செய்து முடிப்பார்களா என்பது நாளை தான் தெரியவரும்.