சினிமா

அடேங்கப்பா.. அஜித்தின் மகளா இது! ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாரே! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

Summary:

அடேங்கப்பா.. அஜித்தின் மகளா இது! ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாரே! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார். ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதைத் தொடர்ந்து அஜித் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி. அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் தயாநிதி அழகிரி அஜித், ஷாலினி, அனோஷ்கா ஆகியோரை சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement