அடேங்கப்பா.. தல அஜித்தின் மகளா இது! நல்லா வளர்ந்து அம்மாவையே மிஞ்சிட்டாரே! செம ஷாக்கான ரசிகர்கள்!!

அடேங்கப்பா.. தல அஜித்தின் மகளா இது! நல்லா வளர்ந்து அம்மாவையே மிஞ்சிட்டாரே! செம ஷாக்கான ரசிகர்கள்!!


ajith-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தல அஜித்தின் பிறந்தநாள் மற்றும் அவரது படங்கள் வெளியாகும் நாட்களை அவர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர். அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 இவர் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும்,  ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அவர்களது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும்.

Ajith
இந்த நிலையில், தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது ஷாலினி தனது தங்கை ஷாமிலி மற்றும் மகள் அனோஷ்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைக் கண்ட ரசிகர்கள் தல அஜித்தின் மகளா இது! நல்லா வளர்ந்து அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.