சினிமா

வாவ்..இணையத்தில் முதலிடத்தில் டிரெண்டாகும் அஜித் பிள்ளைகளின் ஒத்த செல்பி! கொண்டாடும் தல ரசிகர்கள்!!

Summary:

ajith children photo viral

 தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் சசேர்ந்து நடிக்கவும்  பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.இவ்வாறு பொறுமையாகவும், எளிமையாகவும் இருக்கும் தல அஜித் தற்போது வலிமையோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் சினிமா துறையில் மட்டுமின்றி கார் பைக் ரேஸ், அறிவியல்,  விளையாட்டு என மிகவும் வித்தியாசமாக தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் சமீபத்தில் துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

Related imageஇந்நிலையில் அமர்களம் படத்தில் நடித்த போது அஜித் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய ஷாலினி தற்போது முழுவதும் தனது கணவருக்கு உறுதுணையாகவும், தங்களது குழந்தைகளை வளர்ப்பதிலும் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தல அஜித்தின் செல்ல பிள்ளைகளான அனுஷ்காவும், ஆத்விக்கும் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் அதனை தீயாய் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement