"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
திரையரங்கில் மீண்டும் போட்டி போடும் தல - தளபதி.. வெளியான அசத்தல் தகவல்!
![Ajith and Vijay movies re release in Kamala theatre](https://cdn.tamilspark.com/large/large_screenshot20240215-213335-70835.png)
அஜித் - விஜய் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
சமீப காலமாக ஹிட்டான பழைய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த திரைப்படங்களுக்கு, புதிய திரைப்படங்களைப் போலவே ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிக அடியே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி விஜயின் காதலுக்கு மரியாதை மற்றும் அஜித்தின் வாலி ஆகிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.