அட.. செம ஹிட் ஜோடியாச்சே.! மீண்டும் 5வது முறையாக அஜித்துடன் இணையும் பிரபல நடிகை.! வெளிவந்த சூப்பர் தகவல்!!

அட.. செம ஹிட் ஜோடியாச்சே.! மீண்டும் 5வது முறையாக அஜித்துடன் இணையும் பிரபல நடிகை.! வெளிவந்த சூப்பர் தகவல்!!



Ajith and trisha may act as pair in AK62

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் வலிமை திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 61 வது படமான இதனை போனி கபூர் தயாரித்துள்ளார். துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளிவந்தது.

துணிவு படத்திற்கு போட்டியாக பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் தனது 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க உள்ளதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Ajith

இதற்கு முன்பு அஜித், திரிஷா இருவரும் இணைந்து ஜீ, கிரீடம், மங்காத்தா, உன்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளனர். மேலும் திரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.