சினிமா

விஸ்வாசத்தை மிஞ்சும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் வரவேற்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

தலா ajith

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது விஸ்வாசம் திரைப்படம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவா மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்ததால் விஸ்வாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

வீரம், வேதாளம் இரண்டும் வெற்றிப்படங்கள் என்றாலும் விவேகம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நான்காவதாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது இந்த படம்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தின் புக்கிங் பல இடங்களில் தொடங்கி ஹவுஸ்புல் ஆகி வருகின்றன. இந்நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்று நேர் கொண்ட பார்வை படத்தை பற்றிய கருத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. 

அதில் ‘எங்கள் திரையரங்கில் விஸ்வாசத்தை விட நேர்கொண்ட பார்வை புக்கிங் சூப்பர்’ என்று கூறியுள்ளனர்.


Advertisement