சினிமா

எந்த ஒரு முன்னணி நடிகரும் நடிக்க தயங்கும் படத்தில் நடித்து வெற்றி கண்ட தல அஜித் - உற்சாகத்தில் தல ரசிகர்கள்.

Summary:

Ajith

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் படங்களாகட்டும் சரி பிறந்த நாள் விழாவாகட்டும் அதனை ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடுவர். அந்த அளவிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் அஜித்.

தற்போது தல60 படமான வலிமை படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கயுள்ளது. இந்நிலையில் தற்போது தல அஜீத் ரசிகர்களுக்கு சந்தேகமான தகவல் வெளியானதால் அவர்கள் மிகுந்த கொண்டாடத்தில் இருந்து வருகின்றனர். 

அதாவது எந்த நடிகரும் நடிக்க தயங்கும் கதையை எடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் அஜித். no means no என்ற ஒத்த வார்த்தையில் பெண்களின் மனதை கவர்ந்து நேர் கொண்ட பார்வை படத்தில் வெற்றி கண்டுள்ளார். 

தற்போது படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை ரசிகர்கள் தற்போது no means no என்ற வார்த்தையுடன் #100DaysOfGenuineHitNKP என்ற டாக்கை கிரியேட் செய்து ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement