சினிமா

தல தலதான்.. 200 அடிக்கு பிரமாண்ட போஸ்டர் அடித்து மாஸ் காட்டிய திண்டுக்கல் தல ரசிகர்கள்.! புகைப்படம் இதோ.

Summary:

Ajith 28th cinema insturstyal day

தமிழ் சினிமாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் கொண்டாடக்கூடியவர் தல அஜித். இவர் இதுவரை 60க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை படங்கள் செம ஹிட் அடித்து, வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

தல அஜித்திற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்றுடன் தல அஜித் சினிமாவிற்கு வந்து 28 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை ரசிகர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி திண்டுக்கல் தல ரசிகர்கள் பிரமாண்டமாக 200 அடிக்கு பேனர் அடித்து போஸ்டர் ஒட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement