சினிமா

தனுஷ் படத்திலிருந்து விலக்கப்பட்ட விஷால் பட நடிகை! அதுவும் எதனால் தெரியுமா? நீண்ட நாட்களுக்கு பிறகு அவரே வெளியிட்ட தகவல்!

Summary:

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் படத்தின் ஆடிஷனிலேயே தான் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஐஸ்வர்ய லட்சுமி. அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் இணைந்து நடிப்பதற்கு முன்பே எனக்கு தனுசுக்கு ஜோடியாக மற்றொரு படத்தில் பிராமண பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நான் அந்த படத்தின் ஆடிஷனிலேயே நீக்கப்பட்டேன்.

In Ponniyin Selvan film Aishwarya Lakshmi as Sailor? || 'பொன்னியின்  செல்வன்' படத்தில் படகோட்டியாக ஐஸ்வர்யா லட்சுமி?

ஏனெனில் அந்த கேரக்டருக்கு நான் சரியாக இருந்தாலும், அந்தப் பாஷையை எனக்கு சரியாக பேசத் தெரியவில்லை. எனவே அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டுவிட்டேன் என ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார்.


Advertisement