" நான் திருடியதற்கு ஐஸ்வர்யா தான் காரணம்" ஐஸ்வர்யா ரஜனிகாந்த் வீட்டில் வேலைசெய்யும் பெண்ணின் பகீர் வாக்குமூலம்.!

" நான் திருடியதற்கு ஐஸ்வர்யா தான் காரணம்" ஐஸ்வர்யா ரஜனிகாந்த் வீட்டில் வேலைசெய்யும் பெண்ணின் பகீர் வாக்குமூலம்.!


Aiswarya rajinikandh housemaid told reason about her theft

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைத்திருட்டில்‌ ஈடுபட்ட பெண், காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சொல்லிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த்தின்‌  மூத்த மகள் ஐஸ்வர்யா தன் முன்னாள் கணவர் நடிகர் தனுஷை விட்டு பிரிந்த பிறகு தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார். இவர் இயக்கும் 'லால்‌ சலாம்‌' படத்தின் படபிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.

aiswarya

இந்நிலையில்‌, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, அவரது‌ வீட்டில் வேலை செய்த‌ ஈஸ்வரி என்ற‌ பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பெண் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளை வைத்து 1 கோடிக்கு வீடு வாங்கியுள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. தனது திருட்டு வேலை வெளியே தெரியாமல் இருக்க தனது வீட்டினரிடம் தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்று பொய் சொல்லியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி திருட்டு நகைகளை வைத்து வீடு கட்டினால்‌ கண்டுபிடித்து விடுவார்கள் என்று வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டிவிட்டு, இரண்டே வருடத்தில் அந்த கடனை திருப்பி செலுத்தியுள்ளார்.

aiswarya

மேலும் போலீசாரின் விசாரணையில், தன்னை திருடத் தூண்டியதே ஐஸ்வர்யா தான் என்ற திடுக்கிடும் தகவவையும்‌ சொல்லியுள்ளார். அதைப்பற்றி போலீசார் மேலும்‌ விசாரித்ததில், தான் ஐஸ்வர்யாவின் வீட்டில் கடினமாக உழைத்தேன்  ஆனால் ஐஸ்வர்யா உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரவில்லை. அவர்கள் கொடுக்கும் பணம் போதுமானதாக இல்லை என்பதாலேயே தான் சிறு சிறு திருட்டில் ஈடுபட்டேன் என்றும், ஐஸ்வர்யா அதை கண்டுபிடிக்காததால் நகைகளை திருட ஆரம்பித்ததாகவும் விசாரணையில் ஈஸ்வரி கூறியுள்ளார். நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் தான் திருடியிருக்க மாட்டேன் என்று அவர் கூறியது பரபரப்பை‌க் கிளறியுள்ளது.