வீடுவீடாக சோப்பு விற்கிறேன்.! எனக்கு அதுமட்டும் போதும்! அதிரவைத்த நடிகை ஐஸ்வர்யா!!

வீடுவீடாக சோப்பு விற்கிறேன்.! எனக்கு அதுமட்டும் போதும்! அதிரவைத்த நடிகை ஐஸ்வர்யா!!


Aishwarya talk about no work

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில்  நடித்து பிரபலமாக இருந்த நடிகை லட்சுமியின்  மகள் ஆவார். ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா பின்னர் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா சீரியல் வாய்ப்பு, பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன், மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன், இந்த நிலை மாற எனக்கு வேலை வேண்டும்.

aishwarya

தற்போது எந்த பொருளாதாரமும் இல்லாததால் வீடு வீடாக சென்று ஜாலியாக சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை. 
 எந்த வேலையாக இருந்தாலும் சொல்லுங்கள். நான் நிச்சயம் செய்து விட்டு அதற்கான ஊதியத்தை வாங்கி கொள்கிறேன். 

எனக்கு ஒரு மெகா சீரியல் வாய்ப்பு வேண்டும், நான் பிழைத்தது சீரியலை வைத்துதான் சினிமாவால் இல்லை.  அதனால் எனக்கு நல்ல ஒரு மெகா சீரியலில் சான்ஸ் கிடைத்தால் நன்றாக இருக்கும். மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.