இதற்கு ஃபில்டரே தேவையில்லை.! தலைவரின் கேஷுவல் லுக்.! ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா!!aishwarya-shares-rajini-casual-look

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று விஜயதசமி விழாவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் சோபாவில் அமர்ந்து போன் பார்ப்பது போன்ற கேஷுவலான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர், இந்த புகைப்படத்திற்கு பில்டர் எடிட் எதுவும் தேவை இல்லை. ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். நேர்மறையான விலைமதிப்பற்ற புகைப்படம். அப்பாவின் அன்பு என குறிப்பிட்டு அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.