தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தாறுமாறு ரொமான்ஸ்! வட சென்னை படத்தில் நடிக்க நம்ம ஹீரோயின் வாங்கிய சம்பளம் இவ்வளவா! வாயை பிளந்த ரசிகர்கள்!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ரம்மி படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து அவர் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மேலும் அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த காக்காமுட்டை, கனா, ரம்மி, தர்மதுரை,க/பெ ரணசிங்கம், வடசென்னை போன்ற படங்கள் செம ஹிட்டானது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் இணைந்து நடித்த திரைப்படம் வடசென்னை.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார். இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வட சென்னை படத்தில் நடிக்க இவர் 50 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.