ஓர் காதல் கனா... ரசிகர்களின் மனதை ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷின் பர்ஹானா பட முதல் பாடல்!! நீங்க பார்த்துட்டீங்களா!!

ஓர் காதல் கனா... ரசிகர்களின் மனதை ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷின் பர்ஹானா பட முதல் பாடல்!! நீங்க பார்த்துட்டீங்களா!!


aishwarya-rajesh-farhana-movie-first-song-released

தமிழ் சினிமாவில் ஏராளமான வித்தியாசமான கதைக்களங்களில் ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் பர்ஹானா. இந்த திரைப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். 

எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியார் நிறுவனம் பர்ஹானா திரைப்படத்தை தயாரித்துள்ளது. செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதி கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பர்ஹானா திரைப்படத்திலிருந்து ஓர் காதல் கனா என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.