கொரோனா நிவாரண பணி மற்றும் பெப்ஸி அமைப்பிற்கு நிதியுதவி செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! எவ்வளவு தொகை தெரியுமா?

கொரோனா நிவாரண பணி மற்றும் பெப்ஸி அமைப்பிற்கு நிதியுதவி செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! எவ்வளவு தொகை தெரியுமா?


aishwarya rajesh donate 1 lakhs for corono relief

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து வருகிறது. இந்தநிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நிதியுதவி செய்யுமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்று நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்திக், ரஜினிகாந்த் அஜித்குமார், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், வெற்றிமாறன், ஜெயம் ரவி, இயக்குனர் ஷங்கர்,மோகன் ராஜா என  பல பிரபலங்களும் தங்களால்முயன்ற நிதியுதவியை கொரோனா நிவாரண பணிகளுக்காக  வழங்கினர்.

      Aishwarya rajesh

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முதல்வரின் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதியுதவி அளித்துள்ளார். அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ 1  லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் பெப்ஸி தொழில் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி அளித்து உதவியுள்ளார்.