சினிமா விளையாட்டு

கிரிக்கெட்டை தொடர்ந்து குத்துச்சண்டையில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Summary:

Aishwarya rajesh casting as wrestler

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர்.

சமீபத்தில் தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக தனது திறமையை வெளிப்படுத்தினார். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து சர்வதேச அரங்கில் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையாக அந்த படத்தில் இவர் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் ஒரு படத்தில் படித்து வருகிறார். இந்தப் படம் வெளியாகும் முன்பே மற்றொரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படத்தை சதுரங்க வேட்டை 2 படத்தினை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து சர்வதேச அளவில் குத்துச்சண்டை வீராங்கனையாக வளரும் ஒரு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். கஜினி படத்தில் வில்லனாக நடித்த பிரதீப் ரவாத் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக நடிக்கவுள்ளார்.


Advertisement