அடேங்கப்பா.. என்னவொரு பாசம்.! தன் அண்ணனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த காரியம்.! என்னனு நீங்களே பாருங்க!!

அடேங்கப்பா.. என்னவொரு பாசம்.! தன் அண்ணனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த காரியம்.! என்னனு நீங்களே பாருங்க!!


aishwarya-rajesh-ask-vote-for-manikanda-in-bigboss

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் மிகவும் அசத்தலாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன். அவரும் ஏராளமான தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். மணிகண்டன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக இருந்துவந்த மணிகண்டன் சமீப காலமாக டாஸ்க்குகளை வெறித்தனமாக செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது முதன்முறையாக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மணிகண்டனின் தங்கையும், நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், உங்கள் ஆதரவையும், அன்பையும் வெளிப்படுத்தி என் அண்ணன் மணிகண்டாவிற்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.