வாவ்.. தகதகவென தங்கமாய் ஜொலித்த ஐஸ்வர்யாராய்! புகைப்படத்தை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து கொடிகட்டிப்பறப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இவர் தமிழில் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான இருவர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது . இதில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் வித்தியாசமான, அனைவரையும் ஈர்க்கும் வகையிலான உடையணிந்து ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் தங்க நிற உடை அணிந்து, மிகவும் ஜொலித்தவாறு விழாவில் கலந்து கொண்டார். மேலும் அவருடன் அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொண்டார்.தங்க நிறத்தில் பளபளப்புடன் ஜொலித்து வருகை தந்த ஐஸ்வர்யாவை கண்ட அனைவரும் வைத்த கண் எடுக்காமல் அவரை பார்த்து ரசித்தனர்.
இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் 45 வயது ஆனாலும் அழகும், கவர்ச்சியும் குறையவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.