வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
அம்மாடியோவ்.. ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இவ்வளவா.! என்னவெல்லாம் வச்சுருக்காங்க பார்த்தீங்களா!!
கடந்த 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். அதனைத் தொடர்ந்து ஹீரோயினாக களமிறங்கிய அவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாராயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 766 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் ஒரு நாள் நடிக்க விளம்பரங்களுக்கு
6 முதல் 7 கோடி, திரைப்படங்களில் நடிக்க 10 முதல் 12 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்த அவர் மும்பையில் 112 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவில் வசித்து வருகிறாராம். மேலும் அவருக்கு
பாந்த்ராவில் 21 கோடி ரூபாய் மதிப்பில் தனி பங்களா உள்ளதாம். துபாயில் ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்டில் சொகுசு வில்லா ஒன்றும் உள்ளதாம்.
அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் 7.95 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார், 1.60 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ், 1.58 கோடி மதிப்புள்ள ஆடி ஏ8எல், 2.33 கோடி மதிப்புக் கொண்ட லெக்சஸ் எல் எக்ஸ் 570 மற்றும் 1.98 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் எஸ்500 உள்ளிட்ட சொகுசு கார்களை யும் வைத்துள்ளாராம். விரைவில் இவரது சொத்து மதிப்பு 1,000 கோடியை எட்டலாம் என கூறப்படுகிறது.