பொன்னியின் செல்வன்.. பழிவாங்கும் முகம் அழகு! வெளியானது அழகிய ராட்சசி ஐஸ்வர்யா ராயின் போஸ்டர்!!

பொன்னியின் செல்வன்.. பழிவாங்கும் முகம் அழகு! வெளியானது அழகிய ராட்சசி ஐஸ்வர்யா ராயின் போஸ்டர்!!


aishwarya-rai-in-ponniyin-selvan-poster-viral

மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், த்ரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் பிரமோஷன் பணிகளில் படக் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கடந்த நாட்களில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் நடிகர் விக்ரமின் போஸ்டர் மற்றும் வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தியின் போஸ்டர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பழிவாங்கும் முகம் அழகு. பழுவூர் ராணி நந்தினியை சந்தியுங்கள் என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் இரக்கமான முகத்துடன் காணப்படும்  ஐஸ்வர்யா ராய் முக்கிய வில்லி ஆவார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.