சினிமா Covid-19

பிரபல இளம் நடிகைக்கு கொரோனா பாதிப்பு உறுதி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

விஷால் மற்றும் தனுஷுடன் நடித்த பிரபல நடிகைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், விஷால் மற்றும் தனுஷுடன் நடித்த பிரபல நடிகைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக  நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. 

இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு பாசிடிவ் வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 


Advertisement