வீடியோ பிக்பாஸ்

கண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில், செம கெத்தாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இளம்நடிகை!! சாண்டியின் ரியாக்சனை பார்த்தீர்களா!!

Summary:

aishwarya dutta entry in bigboss house

 பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சாண்டி, ஷெரின், முகேன், லாஸ்லியா, தர்சன் மற்றும் கவின் 6 பேர் மட்டுமே இறுதிக்கட்டத்தில் விளையாடி வந்தனர். மேலும் அவர்களில் முகேன் நேரடியாக இறுதிக்கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை பெற்றார். மேலும் இறுதிநிலையில்  பிக்பாஸ் எவ்வளவோ கடுமையான டாஸ்க் கொடுத்ததும் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள் கடுமையாக முழுமூச்சுடன் உழைத்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று போட்டியாளர்களிடம் பிக்பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 5 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு யார் வெளியேற விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்பொழுது கவின் நான் வெளியேற தயார் என்று கூறியுள்ளார். மேலும் போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் பிடிவாதமாக வீட்டை விட்டும் வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் பெரும் வருத்தத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக , நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஐஸ்வர்யா தத்தாவை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவழைத்துள்ளனர். ஊதா நிற மிகவும் கவர்ச்சியான ஆடையில் மிகவும் கெத்தாக நுழைந்த ஐஸ்வர்யாவை பார்த்ததும் போட்டியாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


 


Advertisement