தல வெறியர்களுக்காக.! இதோ மனதை விட்டு அகலாத செம மாஸான ட்ரீட்!!
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கே 'நேர்கொண்ட பார்வை படமாக உருவாகியுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, அபிராமி, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் அஜித் பேசிய வசனம் ரசிகர்களில் ஆழ் மனதில் பதிந்துவிட்டது. அதனைத் தொட்ர்நது படம் ஆகஸ்ட் 8 வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் அஜித் மற்றும் வித்யா பாலனுக்கு இடையேயுள்ள அகலாதே என்ற பாடல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.