மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த வனிதா: மகள் என்று கூட பார்க்காமல் விஜயகுமார் செய்த செயல்!.

மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த வனிதா: மகள் என்று கூட பார்க்காமல் விஜயகுமார் செய்த செயல்!.


again-vijayakumar-daughter-went-to-his-home

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்த மகள் வனிதா, வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் விஜயகுமார் புகார் அளித்தார்.

இதயனையடுத்து வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள்.

இதனைத்தொடர்ந்து, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என கூறி, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று வனிதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

                        vijayakumar and vanitha

இந்நிலையில், நேற்று வனிதா ஆலப்பாக்கத்தில் இருக்கிற வீட்டுக்குள் மறுபடியும் நுழைந்திருக்கிறார். இதனால் கடுப்பான விஜயகுமார், தப்புப் பண்றவங்க கண்டிப்பா அதற்கான பலனை அனுபவிப்பார்கள். நான் இதைப்பற்றி பேசுவதற்கு வேறு எதுவுமில்லை.சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செய்துள்ளேன் என கூறியுள்ளார்.