மீண்டும் இயக்குனர் பாலாவுடன் இணையும் நடிகர் சூர்யா! ஒரே படத்தில் 3 முன்னணி நடிகர்களா!

மீண்டும் இயக்குனர் பாலாவுடன் இணையும் நடிகர் சூர்யா! ஒரே படத்தில் 3 முன்னணி நடிகர்களா!


again-suriya-joined-in-director-bala

நடிகர் சூர்யாவின் காப்பான் படம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலாவுடன் இணைகிறார் நடிகர் சூர்யா.

மேலும் இப்படத்தில் அதர்வா மற்றும் ஆர்யா ஆகிய முன்னணி நடிகர்கள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உண்மையா என தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருந்து பார்ப்போம்.