மார்க்கெட் சரிந்த பாகுபலி நடிகர்.. பிரபாஸிற்கு கை கொடுத்து உதவும் கமல்.?

மார்க்கெட் சரிந்த பாகுபலி நடிகர்.. பிரபாஸிற்கு கை கொடுத்து உதவும் கமல்.?


After kamal hasan produced next film prabhas

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்து உலகளாவிய பிரபலமானார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி பான் இந்தியா நடிகராக சினிமா துறையில் உயர்ந்து நின்றார்.

Bahubali

இப்படத்திற்குப் பிறகு ராதே ஷ்யாம், சாஹோ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் பிரபாஸுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.

இதையடுத்து பிரபாஸ் 'ஆதிபுரூஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஆனால் படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

Bahubali

இதனால் மார்க்கெட் சரிந்த பிரபாஸ் அடுத்து எந்த படத்தில் நடிக்கலாம் என்ற குழப்பத்தில் இருந்து வந்தார். தற்போது கமலஹாசன் தயாரிப்பில் 'பிராஜெக்ட் கே' என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோன், திசா படானி, அமிதாப்பச்சன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இச்செய்தி இணையத்தில் பதவி பிரபாஸுக்கு கமல் கை கொடுத்து உதவியுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.