செம குஷியாக தனது குடும்பத்தினருடன் அதுல்யா அடிக்கும் லூட்டியை பார்த்தீர்களா!! வைரலாகும் கியூட் வீடியோ !!

செம குஷியாக தனது குடும்பத்தினருடன் அதுல்யா அடிக்கும் லூட்டியை பார்த்தீர்களா!! வைரலாகும் கியூட் வீடியோ !!


adulya with family photo viral

தமிழ் குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமாகி கனவுக்கன்னியாக திகழ்பவர் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவருக்கென ஏராளமா ரசிகர்கள் உள்ளனர் மேலும் அதுல்யா இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்துவருகிறார்.

     Athulya ravi

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் நடிகை அதுல்யா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அத்தகைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

       Athulya ravi      Athulya ravi