சினிமா

ப்பா.. பாத்தாலே பத்திக்கும் போல! மாடர்ன் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஸ்டைலிஷ் தமிழச்சி அதுல்யா!

Summary:

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன்  ம

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. கோவையை சேர்ந்த அவர் அதனைத் தொடர்ந்து நாடோடிகள் 2 , அடுத்த சாட்டை, ஏமாளி, கேப்மாரி என சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவரும் அதுல்யா ரவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் பெரும்பாலும் சேலை, தாவணி பாவாடை என பாரம்பரிய உடை அணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்நிலையில் அதுல்யா ரவி தற்போது நடிகர் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் அதுல்யா  தற்போது மாடர்ன் உடையில் பார்வையாலே பத்த வைக்கும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது


Advertisement