சினிமா வீடியோ

அமலாபாலின் அசரவைக்கும் நடிப்பில் அதோ அந்த பறவை போல! நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் மாஸ் வீடியோ இதோ!

Summary:

ado antha paravai pola teaser released

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அவரது முதல் படமே சர்ச்சையை கிளப்பி அவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து அவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார் அப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து அவர் அமலாபால் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

அதோ அந்த பறவை போல க்கான பட முடிவு

இந்நிலையில் அமலா பால் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மிகவும் வித்தியாசமான திகிலூட்டும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement