அரசியல் தமிழகம்

அதிமுகவின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய அதிமுகவினர்!

Summary:

Admk former mp died

 


புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தொகுதியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் , வழக்கறிஞருமான திரு ராஜா பரமசிவம் BSc,BL, EX,MP அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

 சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 1998ம் ஆண்டில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜாபரமசிவம். இவரது மறைவால் அதிமுகவினர் சோகத்தில் உள்ளனர்.


 மறைந்த முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பரமசிவம் அவர்களின் உடல் நல்லடக்கம்,  இறுதி ஊர்வலம் அவர்களின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் நாளை 15.05.2019.புதன்கிழமை  நடைபெற உள்ளது.  இதனால் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்தில் அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement