பிக்பாஸில் அசத்தி வரும் ADK; அவரது முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துருக்கீங்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!!

பிக்பாஸில் அசத்தி வரும் ADK; அவரது முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துருக்கீங்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!!


adk-with-ex-wife-and-his-son-photos-viral

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6 . இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் ADK என அழைக்கப்படும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம். இவர் ராப் பாடகராவார். இவர் டி.இமான், ஏ.ஆர் ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின்  இசையிலும் அசத்தலாக பாடியுள்ளார். 

அதுமட்டுமின்றி தனியாகவும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்துள்ள  இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு விளங்கி வருகிறார். மேலும் அவர் தற்போது பிக்பாஸ் வீட்டிலும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். தினேஷ் கனகரத்தினம் ஜேஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 

ADK

அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு  விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து ADK பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார்.  இந்த நிலையில் தற்போது அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும்  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

     ADK