சினிமா

அதை பற்றி கவலையே படமாட்டேன்! செம ஸ்ட்ராங்காக நடிகை அதிதி ராவ் ஓபன் டாக்

Summary:

பிறரது விவாதங்கள் மற்றும் விமர்சனங்களைப் பற்றி கவலையே படமாட்டேன் என நடிகை அதிதி ராவ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற காற்றுவெளியிடை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து அவர் செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர், ஒரு படம் முழுவதும் நானே இருக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு கிடையாது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அது தியேட்டரை விட்டு வீட்டிற்கு சென்ற பிறகும் ரசிகர்களது மனதை நெருட வேண்டும்.

இந்த விஷயத்தில் ஹாலிவுட் ஹீரோயின்கள்தான் எனக்கு முன்னுதாரணம். அவர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு இருப்பார்களே தவிர மற்றவர்களது விவாதங்கள் மற்றும் விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். நானும் அதைப் போலத்தான் யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார்.


Advertisement