சினிமா

சமந்தா குறித்து பரவி வரும் அதிர்ச்சி தகவல்! ஆதரவாக காட்டமான பதிலடி கொடுத்த பிரபல இளம்நடிகை!

Summary:

aditi rao support to samantha

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக  உள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் 96. காதலை மையமாக கொண்ட இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தை பலமொழிகளிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்தனர். இந்நிலையில் 96 படம் தெலுங்கில் ஜானு என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் சமந்தா மற்றும் சர்வானந்த் நடித்தனர். ஆனால் இப்படம் தெலுங்கில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

samantha with aditi raoக்கான பட முடிவுகள்

இந்நிலையில் ஜானு திரைப்படம் தோல்வியடைந்ததால் சமந்தா நடிக்கவிருந்த மகா சமுத்திரம் படத்தில் அவருக்குப் பதிலாக அதிதி ராவ் நடிக்கஉள்ளார் என்ற தகவல்கள் பரவி வந்தது.இன்னலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை அதிதிராவ் தண்டு டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு வெற்றியால் அல்லது தோல்வியால் எந்தவொரு நடிகரின் நம்பகத்தன்மையையும் பறித்துவிடமுடியாது. இந்த மாதிரியான எண்ணங்களை  ஊக்குவிக்க வேண்டாம். இந்த கேரக்டருக்கு இவர்கள்தான் சரியாக இருப்பார்கள் என்று நினைத்து இயக்குனர், தயாரிப்பாளர்கள் கொடுக்கிற அறிவிப்புகளுக்கு உரிய மரியாதையை கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement