சினிமா

பிரபல இளம் தமிழ் நடிகருக்கு கொரோனா உறுதி! வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ  தொடங்கிய கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திய

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ  தொடங்கிய கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள்,திரை பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் உயிரிழக்கும் அவலமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் இடையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்த நிலையில்,  தற்போது மீண்டும் இரண்டாவது அலை தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. ஒரு நாளைக்கு லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்துவரும் அதர்வா தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் தான் விரைவில் மீண்டு வருவேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Advertisement