சினிமா

500 கோடி பட்ஜெட் பிரம்மாண்ட படத்தில், பிரபாஸ்க்கு தம்பியாகும் பிரபல இளம் தமிழ் நடிகர்! யார்னு பார்த்தீங்களா! வெளியான சூப்பர் தகவல்!

Summary:

adharva going to act as brother for prabhas in aadhipurush

பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார்.  3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். மேலும் அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் ராமரின் தம்பியாக லட்சுமணன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் தற்போது பிரபாஸுக்கு சகோதரராக பிரபல தமிழ் இளம் நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா ||  Atharvaa Says I can not forget my life in fighting scenes

அதர்வா ஏற்கனவே தெலுங்கில் ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கான  கத்தலகொண்டா கணேஷ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படமாகும். 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் அதர்வாவுக்கு தெலுங்கில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement