சினிமா

அதே கண்கள் தீயசக்தி மோகனா செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!! பார்த்தா சும்மா மிரண்டு போயிருவீங்க. !

Summary:

adekankal mohana halloween video viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிவரும் தொடர் அதே கண்கள். தெய்வசக்தி, தீய சக்தி என வித்தியாசமான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில்  மோகனா என்ற மோசமான தீயசக்தி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மோனாலிசா. 

இவர் போஜ்புரி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மோனாலிசா. மேலும் அவர் அத்தகைய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அதேகண்கள் தொடரின் மூலம் தமிழ் மக்களிடையேயும் பிரபலமாகியுள்ளார்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் மேற்கத்திய நாடுகளில் தவறாமல் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஹாலோவீன். பேய் போன்று பார்ப்பதற்கு மிகவும் கொடூரமான, மிரளவைக்கும் வகையில் வித்தியாசமான மேக்கப் போட்டு மிகவும் வேடிக்கையாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மோனலிசா ஹாலாவீன் விழாவிற்கு வாழ்த்துக் கூறி, அத்தகைய பழக்கத்தினை தானும் பின்பற்றி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement