அட.. இவருமா?? மீண்டும் ராஜாராணி 2 தொடரில் இருந்து விலகும் முக்கிய நடிகை.! அவருக்கு பதில் நடிக்கபோவது யார் தெரியுமா??

அட.. இவருமா?? மீண்டும் ராஜாராணி 2 தொடரில் இருந்து விலகும் முக்கிய நடிகை.! அவருக்கு பதில் நடிக்கபோவது யார் தெரியுமா??


actrss-ria-releaving-from-rajarani-2-serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த தொடர்கள் ஏராளம். அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் தொடர் ராஜாராணி 2. இதில் சித்து சரவணன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  மேலும் இதில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக முதலில் ஆலியா மானசா நடித்து வந்தார். இடையில் ஆலியா கர்ப்பமடைந்த நிலையில் அந்த சீரியலில் இருந்து அவர் பாதியிலேயே விலகினார்.

அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் புதிய சந்தியாவாக நடித்தார். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை சந்தியாவாக ஏற்றுக் கொள்ள தயங்கிய நிலையில் தற்போது நீண்ட கதைக்களத்திற்கு பிறகு மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரியா தானும் ராஜாராணி 2 தொடரில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

rajarani 2

இந்த நிலையில் புதிய சந்தியாவாக நடிக்கப் போவது யார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் அடுத்த சந்தியாவாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் நடித்து பிரபலமான ஆஷா கௌதா ராஜாராணி 2 தொடரில் சந்தியாவாக நடிக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இவரது நடிப்பில் உருவான எபிசோடுகள் இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.