சினிமா

தயாரிப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பிரபல நடிகைகளின் கண்கவரும் புகைப்படங்கள்!!

Summary:

actresses in trident arts 25th jubilee

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தர்கள் ஆன Trident ஆர்ட்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் திரை உலகின் 500க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்து வசூல் சாதனை புரிந்துள்ளது trident ஆர்ட்ஸ் நிறுவனம். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றிப்படங்களாக மாற்றியதற்கு இந்த நிறுவனமும் ஒரு காரணம்.

ரஜினியின் காலா, கமலின் உன்னைப்போல் ஒருவன், விஜய்யின் சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல் மற்றும் அஜித்தின் வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம் என பல வெற்றி படங்களை விநியோகம் செய்துள்ளது இந்த நிறுவனம். 

இந்நிலையில் நேற்று இந்த நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. 1993ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 25 ஆண்டுகளை கடந்து தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சியில் பேசிய அந்த நிறுவனத்தின் தலைவர் ரவீந்திரன் திரைத் துறையைச் சார்ந்த அனைத்து கலைஞர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட பல முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படங்களின் தொகுப்பு இதோ: 


Advertisement