எங்க தலைவிக்கு தில்ல பாத்தியா?. வெள்ளை பாம்புடன் அசாட்டாக விளையாடும் விஜே பார்வதி..! இணையத்தை கலக்கும் வீடியோ வைரல்..!!



 Actress VJ Parvathy Play With Snake Instagram Video Goes viral

மதுரையை பூர்வீகமாக கொண்ட விஜே பார்வதி, தொடக்கத்தில் செய்தியாளராக பணியாற்றி பின்னாளில் தனியார் யூடியூப் சேனலில் சேர்ந்து பிரபலமானார். 

இவரின் பேச்சுக்கும், பேட்டி எடுக்கும் திறனுக்கும் என இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள். சிலர் இவரை கலாய்ப்பதற்கே ரசிகர்களாகவும் இருக்கின்றனர். தற்போது அவர் சின்னத்திரை, வெள்ளித்திரையில் தோன்றி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பை பிடித்து அவர் விளையாடும் விடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் எங்க தலைவிக்கு தில்ல பாத்தியா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.