சினிமா வீடியோ

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி! அதற்கு முன் கண்ணீருடன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

Summary:

Actress Vijyalakshmi commits suicide

தமிழ்சினிமாவில் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி.  அதனைத் தொடர்ந்து அவர் ராமச்சந்திரா, மிலிட்டரி, பாஸ் என்ற பாஸ்கரன், தம்பிக்கோட்டை, மீசையை முறுக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சில மாதங்களாகவே சீமான் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் இவர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் நடிகை விஜயலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் விஜயலட்சுமி சென்னையில் திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது குடும்பத்தினர்கள் அவரை மீட்டு அடையாறு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்கொலை முயற்சிக்கு  முன்பு நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டுள்ளார். இது எனது கடைசி வீடியோ. நான் மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளேன். எனது அக்காவிற்காகவும்,  அம்மாவிற்காகவும்தான் பொறுத்து  இருந்தேன். ஆனால் தற்போது நடப்பவைகளை தாங்கிகொள்ள முடியவில்லை. நான் எனது இரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிடுகிறேன் ஏற்கனவே இரண்டு மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் என பல கருத்துக்களை வெளியிட்டு பேசியுள்ளார். 


Advertisement