ஹீரோவாகும் காமெடி நடிகர் முனீஷ்காந்த்! அவருக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா?? செம ஷாக்கில் ரசிகர்கள்!!

ஹீரோவாகும் காமெடி நடிகர் முனீஷ்காந்த்! அவருக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா?? செம ஷாக்கில் ரசிகர்கள்!!


actress-vijayalakshmi-pair-to-muneeshkanth

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை-28 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகளாவார். அதனை தொடர்ந்து அவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் ஹீரோயினாக நடித்தார். 

ஆனால் அதிலிருந்தும் அவர் பாதியிலேயே விலகினார். மேலும் நடிகை விஜயலட்சுமி ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு வெற்றியாளரும் ஆனார். நடிகை விஜயலட்சுமி ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

vijayalakshmi

இந்த நிலையில் அவர் தற்போது காமெடி நடிகர் முனீஸ்காந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக  தகவல்கள் பரவி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் என்பவர் இயக்கவுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஷாக் கொடுத்துள்ளது.