உன் பிளான் என்னனு தெரியும்.. ரவீந்தர்- மஹா திருமணம் குறித்து நடிகை வனிதா ஓபன்டாக்!!

உன் பிளான் என்னனு தெரியும்.. ரவீந்தர்- மஹா திருமணம் குறித்து நடிகை வனிதா ஓபன்டாக்!!


actress-vanitha-talk-about-raveendar-maha-marriage

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி பின் பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹாலட்சுமி. அவர் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் மஹாலட்சுமி அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.

 இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர், சிலர் மஹாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை பணத்திற்காகதான் திருமணம் செய்ததாக மோசமாக விமர்சனமும் செய்து வருகின்றனர்.  ரவீந்தர் சமூக வலைதளங்களில் டிவி நிகழ்ச்சிகள், போட்டியாளர்களை விமர்சனம் செய்ததன் மூலம் பிரபலமானவர். அவர் நடிகை வனிதா பீட்டர்பாலை 3-வது திருமணம் செய்த போது அவரது முதல் மனைவிக்கு ஆதரவாக இருந்து வனிதாவுடன் வாக்குவாதம் செய்து சண்டை போட்டுள்ளார். 

இந்த நிலையில் ரவீந்தர்-மஹாலட்சுமி திருமணம் குறித்து வனிதா என்ன கூறபோகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், வனிதா டுவிட்டரில் கர்மா யாரையும் சும்மா விடாது என பதிவிட்டிருந்தார்.

vanitha

இந்த நிலையில் வனிதா தற்பொழுது அளித்த பேட்டியில், எல்லாம் பிளான் பண்ணி, ஸ்டண்ட் கிரியேட் பண்ணி என் திருமண வாழ்க்கையை மொத்தமாக காலி பண்ணிட்டாங்க. Mind your own business. இதுதான்  அவருக்கு அப்போதே அட்வைஸ் செய்தேன். அவருடன் சண்டையெல்லாம் கிடையாது. அதன் பிறகு பேசியுள்ளேன். ரவீந்தர் உன் மாஸ்டர் பிளான் என்னனு எனக்கு தெரியும். என்கிட்ட வெச்சிக்காதே என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நீங்க எதுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க. கமெண்ட்ஸ் எல்லாம் Disable பண்ணிட்டு போய் வாழ்க்கையை பாருங்கள். அந்த ட்விட்டை நான் பொதுவாகதான் போட்டேன். ரவி நல்லா இரு என வனிதா கூறியுள்ளார்‌.