அட.. அப்படியே தாத்தாவை உரிச்சு வச்சிருக்காரே! வனிதாவின் மூத்தமகன் இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!

அட.. அப்படியே தாத்தாவை உரிச்சு வச்சிருக்காரே! வனிதாவின் மூத்தமகன் இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!



actress-vanitha-son-srihari-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு  மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். மேலும் வனிதா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று இணையத்தில் பேசுப்பொருளானார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாத  வனிதா யூடியூப் வீடியோக்கள், படங்கள் என பிஸியாக இருந்து  வந்தார். மேலும் வனிதா தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நடிகை வனிதாவிற்க்கும் அவரது முதல் கணவர் ஆகாஷ்க்கும் மூத்த மகனாகப் பிறந்தவர் விஜய் ஸ்ரீஹரி.

Srihari

அவர் கணவரை பிரிந்த நிலையில் ஸ்ரீஹரி தனது தாத்தா விஜயகுமாருடன் வாழ்ந்து வருகிறார். அவர் திரைத்துறை சம்பந்தமான படிப்பை படித்துள்ளாராம். மேலும் ஷார்ட் பிலிம் ஒன்றை இயக்கி நடித்துள்ளாராம்.  இந்த நிலையில் அவரது தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் அவர் அப்படியே தாத்தாவைப் போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.