அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் நடிகை வாணி போஜன்! வெளியான புகைப்படங்கள்!actress-vani-bojan-latest-modern-look-photos

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். பொதுவாக டிவி சீரியல் என்றால் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்த காலம் மாறி வாணி போஜன் போன்ற நடிகைகளுக்காக இளைஞர்கள் கூட டிவி சீரியல் பார்க்க ஆரம்பத்தினர்.

தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் வாணிபோஜன். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறுவர்கள் பங்கேரும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.

vani bhojan

தற்போது வெள்ளி திரையில் நடிக்க முயற்சித்துவரும் நடிகை வாணிபோஜன் நடிகர் வைபவுக்கு ஜோடியாக நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பயங்கர மாடர்னாக மாறி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் வாணி போஜன். அந்த புகைப்படங்களில் டி ஷர்ட், கிழிந்த ஜீன்ஸ் என பயங்கர மாடர்னாக காட்சியளித்துள்ளார் வாணிபோஜன்.

vani bhojan