சினிமா

நடிக்க வருவதற்கு முன்பு தெய்வமகள் சத்யா என்ன வேலை பார்த்தார் தெரியுமா?

Summary:

Actress vani bhojan worked as air hostess before acing in serial

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்றுதான் தெய்வமகள். சிலசமயங்களில் சீரியலை விட அதில் நடிக்கும் நடிகைகள் அதிக வரவேற்ப்பை பெறுவது சாதாரணமாகிவிட்டது. 

அப்படி மக்களிடம் பிரபலமானவர்கள்தான்  இந்த தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வாணி போஜன். இந்த தொடரில் நடித்த இரண்டு கதாபாத்திரங்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றார்கள் அதில் சத்யா என்ற வாணி போஜன் மற்றும் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்த ரேகா.

இது தவிர லட்சுமி வந்தாச்சு போன்ற சில தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை வாணி போஜன். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறுவர்கள் பங்கேற்கும் நகைச்சுவை தொடர் ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் பல்வேறு தொலைக்காட்சிகளில் நாயகியாக கலக்கிவரும் நடிகை வாணி போஜன் நடிக்க வருவதற்கு முன்பு என்ன வேலை செய்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகை வாணி போஜன் நடிக்க வருவதற்கு முன்பு கிங்பிஷர் விமானத்தில் விமான பணிப்பெண்ணாக வேலைபார்த்துள்ளார் (Air hostess).


Advertisement