சினிமா

எப்போதும் ஒரே குடி..! 51 வயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நடிகை ஊர்வசி.! கணவனின் குடும்பத்தால் நேர்ந்த கதி..!

Summary:

தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபாலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஊர்வசி. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாகநடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதையும் தாண்டி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார். அதன்பின் தயாரிப்பாளராகவும்  படங்களை தயாரித்துள்ளார் ஊர்வசி.

தற்போது 51 வயதாகும் நடிகை ஊர்வசி தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஊர்வசி, தான் குடிக்கு அடிமையான தகவலை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு வரை தனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை எனவும், ஆனால், திருமணத்திற்க்கு பிறகு தான் குடிக்கு அடிமையாகிவிட்டதாகவும் ஊர்வசி கூறியுள்ளார்.

மேஜர் மனோஜ் ஜெயன் என்பவரை திருமனம் செய்துகொண்டார் நடிகை ஊர்வசி. கணவரின் குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து குடிப்பார்கள் என்றும் அவர்களுடன் சேர்ந்து தானும் இந்த பழக்கத்தை கற்றுக்கொண்டதாக அந்த பெட்டியில் கூறியுள்ளார் நடிகை ஊர்வசி.


Advertisement