அடா மழையில் அன்போடு நனையவைத்த, கியூட்டிப்பை தமன்னாவுக்கு இன்று பிறந்தநாள்.!

அடா மழையில் அன்போடு நனையவைத்த, கியூட்டிப்பை தமன்னாவுக்கு இன்று பிறந்தநாள்.!


Actress Tamannaah Bhatia Birthday Today

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா பாட்டியா (Tamanna Bhatia) என்ற தமன்னா. சில ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 

கடந்த 2005 ஆம் வருடம் ஹிந்தி படத்தில் நடிக்க தொடங்கிய தமன்னா, 2006 ஆம் வருடம் தெலுங்கு மொழியில் ஸ்ரீ என்ற படம் நடித்து, அதனைத்தொடர்ந்து 2007 ஆம் வருடம் கேடி திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆகினார். 

actress

அயன், வேங்கை, பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை போன்ற வெற்றிப்படத்திலும் நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, இவர் நடித்த படங்கள் எதிர்பாராத அளவு வெற்றியை அடையவில்லை. நடிகர் விஜயுடன் நடித்து சுறா திரைப்படமும் வெற்றிபெறவில்லை. சில படங்களில் குத்து பாடலுக்கும் நடனம் ஆடியுள்ளார்.

actress

பாகுபலி திரைப்படம் இவருக்கு இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெருமளவு பெற்று கொடுத்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில், வைர வியாபாரியின் மகளாக டிச. 21 ஆம் தேதி 1989 ஆம் வருடம் தமன்னா பிறந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள், 31 வயது ஆகிறது. 

தமன்னாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.