வாவ்... தமன்னாவுக்கு ஆம்பள கெட்டப் போட்டா எப்படி இருக்கும் பாருங்க.. வைரல் வீடியோ...

வாவ்... தமன்னாவுக்கு ஆம்பள கெட்டப் போட்டா எப்படி இருக்கும் பாருங்க.. வைரல் வீடியோ...


actress-tamanaa-latrst-video

நடிகை தமன்னாவின் ஆம்பள கெட்டப் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கேடி  திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

Thamanna

நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் தமன்னாவுக்கு கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவருகிறார்.

தமிழ் சினிமாவில் கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த ஆக்சன் திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் தமன்னா.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். தற்போது ஆம்பள கெட்டப்பில் உள்ள மாணிக்கம் ஸ்பீக்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.