சினிமா

மயக்க ஊசிக்கு பதில் இதுவா.! முகம் வீங்கி விகாரமாக மாறிய பிரபல நடிகை.! வெளிவந்த ஷாக் காரணம்!!

Summary:

மயக்க ஊசிக்கு பதில் இதுவா.! முகம் வீங்கி விகாரமாக மாறிய பிரபல நடிகை.! வெளிவந்த ஷாக் காரணம்!!

கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட் கனால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்ற நிலையில், சிகிச்சைக்கு பிறகு ஸ்வாதியின் முகம் முழுவதும் வீங்கி அடையாளமே தெரியாமல் மாறியது. இந்நிலையில் அது விரைவில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 நாட்களுக்கு பிறகும், அவரது முகத்தில் வீக்கம் குறையவில்லை.

பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற ஸ்வாதியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து 
பல் வேரை அகற்றினால் சரியாகிவிடும் எனக்கூறி அதற்கான சிகிச்சையும் அளித்துள்ளனர். ஆனாலும் வீக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும் இதுகுறித்து விசாரித்ததற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் இதனால் படங்களில் நடிக்க முடியவில்லை என வேதனை அடைந்துள்ளார். மேலும் மற்றொரு மருத்துவமனையில் அவர் இதற்காக சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்வாதியின் முகம் வீங்கியதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது மருத்துவ பரிசோதனையில் ஸ்வாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக முகத்தில் உள்ள முகப்பருவை குணப்படுத்த பயன்படுத்தும் சாலிசிலிக் ஆசிட்டை செலுத்தியது தெரியவந்துள்ளது. இந்த ஆசிட் தோலில் ஊடுருவி முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. மேலும் தோலில் ஏற்படக்கூடிய அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்குமாம். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட மருத்துவர் மீது  ஸ்வாதி போலீசில் புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement